தான் சிறுவயதில் வாழ்ந்த வீட்டுக்கு மீண்டும் வந்து அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் பௌத்த பிக்கு ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இபலோகம, ஹிரியாபிட்டிகம வீடொன்றிலேயே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் இறந்த பிக்கு 27 வயது நிரம்பியவர் எனவும் முன்னாள் இராணுவத்தில் பணியாற்றி மருத்துவ காரணங்களுக்காக ஓய்வு பெற்றவர் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நபரில் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரித்து வருவதாக பொலிசார் தெரிவிக்கின்ற அதேவேளை இராணுவத்தினரும் பிரத்யேக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment