30 வருட யுத்தம் நிறைவடைந்த பின்னரும் ஐக்கியத்தையும் சமத்துவ அரசியல் சூழ்நிலையையும் உருவாக்க முடியாமல் இலங்கை திணறி வருகின்ற நிலையில் வட-கிழக்கில் தமிழ் - முஸ்லிம் சமூகங்களைப் பிரித்தாள்வதை மையமாகக் கொண்ட மேலும் ஒரு புதிய குழு அரசியலில் களமிறங்கியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகிய கருணா அம்மான் தலைமையிலான அணியினர் தேர்தல் காலத்தில் இனவிரோத உணர்வுகளை தூண்டி வரும் நிலையில் புணர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி எனும் பெயரில் களமிறக்கப்பட்டுள்ள இப்புதிய குழு தமது வருகையை வெறுப்புணர்வைத் தூண்டும் செயற்பாட்டுடன் ஆரம்பித்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து, ஆயுதங்களையும் இல்லாதொழித்ததாக இலங்கை அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கையில் புலிகளின் ஆயுதங்கள் அனைத்தும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கையில் இருப்பதாகவும் அதனால் தான் அவ்வப் போது சிங்கள பேரினவாதத்தினால் தாக்கப்படும் போதெல்லாம் முஸ்லிம் அரசியல்வாதிகள் இரத்த ஆறு ஓடும் என எச்சரிப்பதாகவும் இப்புதிய குழு வியாக்கியானம் உருவாக்கியுள்ளது.
அளுத்கம, கிந்தொட்ட, அம்பாறை, திகன என தொடர்ந்த அனைத்து வன்முறைகளிலும் முஸ்லிம் சமூகம் பெரும் பொருளாதார, சமூகம, வாழ்வியல் இழப்புகளை சந்தித்தும் தொடர்ந்தும் மத்திய அரசிடமே நியாயத்தைப் பெற்றுக்கொள்ளும் அரசியல் போராட்டத்தையே முன்னெடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment