பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு யோசனையை தாம் எதிர்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கம் பொது மக்களிடம் வரியை அதிகரித்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவா? மக்கள் எதிர்பார்த்த மாற்றம் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,
எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் தங்கள் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரவில்லை. அமைச்சு பதவிகளை கொடுத்து அரசாங்கத்தில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாயை மூடுவது போல எமது வாயையும் மூட இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருக்கலாம்.ஆனால் இந்த சம்பள அதிகரிப்புகளால் எமது வாயை மூட முடியாது என குறிப்பிட்ட அவர் சம்பள அதிகரிப்பு யோசனையை தாம் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் சலுகை வழங்குவதை நிறுத்திவிட்டு மக்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
-JO
No comments:
Post a Comment