கடந்த பொதுத் தேர்தலோடு பிரதான கட்சிகளினால் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அரசியலுக்குள் தனக்கொரு அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்கும் மேர்வின் சில்வா, துட்டகைமுனுவைப் போல தானும் வாள் எடுக்க நேரிடும் என பிரதான கட்சிகளுக்கு எச்சரித்துள்ளார்.
சிறுபான்மை சமூகத்துக்கு அதிகாரப் பகிர்வைத் தருவதாக நடைமுறை அரசும் மஹிந்த குடும்பமும் ஏமாற்றி வருவதாகவும் தெரிவிக்கின்ற அவர், இன முறுகல்களினால் எண்ணற்ற விகாரைகள் மூடப்பட்டுள்ளதுடன் புராதன அடையாளங்களும் வடபுலத்தில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், பௌத்த மக்களின் கால்கலைக் கட்டிவிட்டு நடக்க விடும் போக்கு கைவிடப்படவில்லையென்றால் தான் வாள் தூக்க நேரிடும் என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment