ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெயரில் இயங்கும் அரசியல் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு எதிராக எதிர்வரும் வியாழனன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடப் போவதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.
மஹிந்த ஆட்சியின் போது அத்தனகல நீர் வழங்கல் திட்டத்தில் ஊழல் இடம்பெற்றதாகவும் 18 பில்லியன் ரூபா திட்டத்துக்கு பசில் ராஜபக்சவும் ஹக்கீமும் இணைந்து 35 பில்லியன் ரூபா மதிப்பிட்டு ஊழலில் ஈடுபட்டதாகவும் சந்திரிக்கா மேலும் தெரிவிக்கிறார்.
மஹிந்த ஆட்சியின் போது அவரை வாழ்நாள் ஜனாதிபதியாக்கும் வகையிலான 18ம் திருத்தச் சட்டத்தை ஆதரித்ததன் பின்னணியில் 'ஊழல்' இருப்பதாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment