பயங்கரவாதி ஞானசாரவுக்கு பொது மன்னிப்புக் கோரி ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசாரவின் நெருங்கிய சகா மாகல்கந்தே சுகத தேரர்.
2009 யுத்த நிறைவின் பின் முதலில் கிறிஸ்தவ சமூகத்தையும் பின் முஸ்லிம்களையும் இன ரீதியிலான ஒடுக்கு முறைக்குள்ளாக்கும் பேரினவாத செயற்திட்டத்தை முன்னின்று நடாத்தியதுடன் அதிகார வர்க்கத்தின் ஆசியில் இயங்கி வந்த ஞானசார, ஹோமாகம நீதிமன்றுக்குள் புகுந்து அடாவடித்தனம் புரிந்ததன் பின்னணியில் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்திய விவகாரத்தில் வழங்கப்பட்ட ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ள ஞானசாரவுக்கு நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஆறு வருடங்களில் நிறைவு செய்யும் வகையிலான கடூழிய சிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
இந்நிலையில், இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ள ஞானசார தரப்பு, தற்போது ஜனாதிபதியிடம் பொது மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்போவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment