நேபாள் சென்றிருக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
காத்மன்டுவில் இடம்பெறும் BIMSTEC மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ள நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
உலக சனத்தொகையின் 22 வீதத்தைக் கொண்டுள்ள பங்களதேஷ், இந்தியா, மியன்மார், இலங்கை, தாய்லாந்து, பூட்டான் மற்றும் நேபாள் உள்ளடங்களான அமைப்பே BIMSTEC என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment