சவுதி அரேபியாவின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை கனடாவுக்கு இல்லையென பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ள சவுதி, தமது நாட்டில் உள்ள கனேடிய தூதரை வெளியேற உத்தரவிட்டுள்ளதுடன் புதிய வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
பெண்களுக்கு வாகனங்களை செலுத்தும் உரிமை கோரிப் போரடிய சிலர் தொடர்ந்தும் சிறையில் வைக்கப்பட்டிருப்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட கனடா, அவர்களை விடுவிக்கக் கோரியிருந்தது.
இந்நிலையிலேயே, தமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட கனடாவுக்கு உரிமையில்லையென தெரிவித்து, சவுதி அரேபியா அதிரடியாக பதில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதேவேளை, ட்ரம்பின் மத்திய கிழக்கு வருகையின் பின் ஆரம்பமான சவுதி கூட்டணி - கட்டார் முறுகலும் ஒரு வருடத்தைத் தாண்டியும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment