பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டுகளின் பின்னணியில் ஞானசாரவின் சகாவும் இராவணா பலய அமைப்பின் செயலாளருமான இத்தேகந்த சத்தாதிஸ்ஸ, ஞானசாரவின் பேச்சாளர் மாகல்கந்தே சுதத்த உட்பட நான்கு பௌத்த பிக்குகளுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் அங்கவீனர்களான இராணுவத்தினரின் சார்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக குறித்த நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கங்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment