இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளார் சர்ச்சை அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமி.
தென்னாபிரிக்க மக்களுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த நெல்சன் மண்டேலாவுக்குப் போன்று விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கையை விடுவித்த மஹிந்தவுக்கும் பாரத ரத்னா விருதளிக்க வேண்டும் என சுவாமி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்துத்வா அடிப்படைவாதிகளின் நிகழ்வில் கலந்து கொள்ள அண்மையில் மஹிந்தவுக்கு நேரில் வந்து சுவாமி அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment