மருத்துவ சிகிச்சைக்காக பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ள அதேவேளை கோத்தபாயவும் அங்கு சென்றுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருவரும் அமெரிக்க பிரஜாவுரிமையுள்ளவர்கள் என்பதோடு ஜனாதிபதி தேர்தல் தோல்வியோடு இரவோடிரவாக அமெரிக்கா சென்ற பசில் ராஜபக்சவின் பாரியார் இதுவரை நாடு திரும்பவில்லையென்பதும் இலங்கையில் இருந்த காலத்தில் உயர்ந்த அந்தஸ்த்துடன் முக்கிய நபராக வலம் வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
இந்நிலையில், கோத்தபாய ராஜபக்சவையே கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment