ஒக்டோபர் 1ம் திகதி முதல் இரயில் பயணங்களுக்கான கட்டணம் 15 வீதத்தால் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு கோரி இரயில்வே தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் 2008ம் ஆண்டுக்குப் பின் முதற்தடவையாக இவ்வாறு கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஆகக்குறைந்த பயணக் கட்டணம் 10 ரூபாவாகத் தொடரும் எனவும் கட்டண உயர்வு அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் இரயில்வே திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment