அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரான நிசாம்தீனின் தாக்குதல் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மல்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜுலி பிசப் ஆகியோர் உள்ளடங்குவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
25 வயதான இலங்கைப் பிரஜை, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்பதற்கான விசாவில் தங்கியிருந்த அதேவேளை, பல்கலையில் வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளார். இந்நிலையில், குறித்த நபர் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு பிரயாணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் காணப்பட்ட தகவல்கள், இலக்குகள் மற்றும் குறியீடுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்ற அதேவேளை குறித்த நபர் ஒக்டோபர் 24 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment