வெளிநாடுகளில் வாழும் இலங்கையரை மீண்டும் தாய் நாட்டில் முதலிடுவதை ஊக்குவிக்கும் பின்னணியில் இரட்டைக் குடியுரிமை வழங்கல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்காத ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளின் பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையர்க்கு விசேட விசா ஒன்றின் மூலம் இலங்கைப் பிரஜாவுரிமைக்கான வசதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இதனடிப்படையில் குறிப்பிட்ட நாடுகளின் பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையர்க்கு இங்கு நீண்ட நாட்கள் தங்கியிருக்கக் கூடிய வகையில் புதிய விசா வகை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment