2009 யுத்த நிறைவின் பின் இலங்கையில் இன ரீதியான மோதலை உருவாக்குவதற்காகவும் முஸ்லிம்களை இன ரீதியாக அடக்கியாள்வதற்காகவும் ஏவிவிடப்பட்டிருந்த பொது பல சேனா பயங்கரவாதி ஞானசாரவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஹோமாகம நீதிமன்றுக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்ததன் பின்னணியில் ஆறு வருடங்களில் தொடர்ச்சியாக நிறைவு செய்யும் வகையில் 19 வருடத்துக்கான கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளர்.
திருமதி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியதன் பின்னணியில் ஆறு மாதங்களில் நிறைவடையும் வகையில் வழங்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையிலிருந்து இரு வாரங்களில் ஞானசார பிணையில் வெளியாகிச் சென்றிருந்ததுடன் அவரது சகாக்களால் பாரிய வரவேற்புடன் கொண்டாடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏலவே சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசாரவுக்கு அவரது பிரசன்னம் இல்லாமலேயே இவ்வாறு தண்டனையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment