வட மாகாணத்துக்கு தெற்கிலிருந்து தான் போதைப் பொருள் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கிறார் நா.உ விஜயகலா மகேஸ்வரன்.
வடபுலத்தில் உரிமைகள் மற்றும் ஒழுக்கம் மேலோங்க மீண்டும் விடுதலைப்புலிகள் அமைப்பை கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்து அண்மையில் சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற போதை ஒழிப்பு நிகழ்வொன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையாளர்களை உருவாக்குவதில் தெற்கின் ஒரு சில நபர்கள் நன்மையடைந்து வருவதாகவும் அவர்களே இதற்குப் பொறுப்பெனவும் விஜயகலா மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment