முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய பாதுகாப்பு படை அலுவலர் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்வதனவைக் கைது செய்யத் தயாராக இருப்பதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளது குற்றப்புலனாய்வுப் பிரிவு.
நேவி சம்பத்திற்கு எதிரான விசாரணைகளை தடுத்தமை தொடர்பில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த அரசில் இடம்பெற்ற ஆட்கடத்தல், கொலைச் சம்பவங்களின் பின்னணியில் பாதுகாப்பு படைகளில் பணியாற்றிய பலரே இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமையும் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவே வெள்ளைவேன் கடத்தல்களுக்கு ஆணையிட்டவர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment