பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அதேவேளை கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் கோத்தபாய ராஜபக்சவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரஜாவுரிமையையும் கை விட்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கோத்தபாய ஆயத்தமாகி வரும் அதேவேளை பசில் ராஜபக்சவுடன் பனிப்போர் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனினும், தன்னை வேட்பாளராகத் தயார் படுத்துவதில் கோத்தா மும்முரமாக செயற்பட்டு வருகின்றமையும் இதன் ஒரு கட்டமாக முஸ்லிம் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment