வடமத்திய மாகாண முதல்வர் பதவிக்குத் தான் போட்டியிடப் போவதாக தெரிவிக்கிறார் முன்னாள் சர்ச்சை அமைச்சர் மேர்வின் சில்வா.
அண்மைக்காலமாக அநுராதபுரம் மற்றும் அண்டிய பிரதேசங்களில் பௌத்த புராதன விடயங்கள் தொடர்பான சம்பவங்களில் வலிந்து நுழைந்து அறிக்கை விட்டு வரும் மேர்வின், அங்கு தம்மிடம் மக்கள் முன் வைத்து வரும் எண்ணிலடங்கா கோரிக்கைகளை மதித்து இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கிறார்.
2015 பொதுத் தேர்தலோடு இரு பெரும் கட்சிகளிலிருந்தும் ஒதுக்கப்பட்டுள்ள மேர்வின் புதுக் கட்சியூடாகவே போட்டியிடப் போவதாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment