தற்காலிகமாக மூடப்பட்டது மின்னேரிய தேசிய பூங்கா ! - sonakar.com

Post Top Ad

Monday 27 August 2018

தற்காலிகமாக மூடப்பட்டது மின்னேரிய தேசிய பூங்கா !


மின்னேரிய தேசிய பூங்காவில் பணியாற்றும் வன இலாகா அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்றின் பின்னணியில் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் அங்கு அனுமதியின்றி மீன்பிடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் வன இலாகா அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு புகுந்த சுமார் 100 பேர் கொண்ட குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி தடுத்து வைக்கப்பட்டிருந்த நபரை விடுவித்துச் சென்றுள்ளனர்.

இப்பின்னணியில் அங்கு நிலவும் பதற்றத்தினையடுத்து இவ்வாறு தற்காலிமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்தாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment