பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்! - sonakar.com

Post Top Ad

Saturday, 18 August 2018

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்!


20 வருட அரசியல் போராட்டத்தின் பின் பாகிஸ்தானின் பிரதமராக இன்று பதவியேற்றுள்ளார் முன்னாள் கிரிக்கட் நட்சத்திரம் இம்ரான் கான்.



176:96 எனும் வாக்கு அடிப்படையில் நாடாளுமன்றம் நேற்றைய தினம் இம்ரானுக்கு ஆதரவளித்திருந்த நிலையில் இன்று அவர் பதவியேற்றுள்ளார்.

பாகிஸ்தானை நிதி நெருக்கடியிலிருந்து மீட்பதே தனது பிரதான பணியென தெரிவிக்கின்ற இம்ரான் மீது இளைஞர் சமூகம் அதீத நம்பிக்கை வைத்திருப்பதுடன் தொடர் ஊழல்களால் பாதிக்கப்பட்டுள்ள அரச இயந்திரத்தை வழி நடாத்தும் பாரிய பொறுப்புடன் இம்ரான் பாகிஸ்தானின் பிரதமராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment