ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் கோத்தபாய ராஜபக்ச.
மஹிந்த அரசின் ஊழல்களை விசாரிக்கவென அமையப் பெற்றுள்ள புதிய நீதிமன்றிலும் கோத்தாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படும் குறித்த விமான சேவைகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் கோத்தா மற்றும் அவரது உறவினரும் முன்னாள் ஸ்ரீலங்கன் பணிப்பாளருமான நிசாந்த ஆகியோரும் விசாரிக்கப்படவுள்ளனர்.
கூட்டாட்சி அரசு நீண்டகாலமாக விசாரணைகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment