மஹிந்த அரசின் பாரிய நிதி மோசடி ஊழல்களை துரிதமாக விசாரிக்கவென ஆரம்பிக்கப்பட்டுள்ள மூன்று நீதிபதிகளுடனான விசேட நீதிமன்றின் முதலாவது வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றுள்ளது.
லிட்ரோ கேஸ் நிறுவனத்தில் 2014ம் ஆண்டு பெப்ரவரி முதல் 2015ம் ஆண்டு ஜனவரி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடியின் பின்னணியிலேயே மஹிந்த ராஜபக்ச பதவிக்காலத்தில் ஜனாதிபதி செயலக பிரதானியாகப் பணியாற்றிய காமினி செனரத் உட்பட நால்வருக்கு எதிராக இவ்வழக்கு விசாரணை ஆரம்பமானது.
இந்நிலையில், சந்தேக நபர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கின் விசாரணை செப்டம்பர் 19ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment