போதைப்பொருள் கடத்தல், ஆட்களை மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பொடி விஜே என அறியப்படும் பாதாள உலக பேர்வழி கொலன்னாவயில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குடு லாலின் சகாவான குறித்த நபரின் இயற்பெயர் ஹேவாதந்திரிகே சிசிர குமாரவாகும்.
பாதாள உலகை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment