சிறுவர்களின் உரிமைக்கான எல்லை கடந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டாவது ஆசிய மாநாடு இன்று (28) கொழும்பில் ஆரம்பமானது.
சிறுவர்களுக்கான உரிமை மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக நெதர்லாந்து நாட்டின் குளோபல் மார்ச் நிறுவனத்தின் இரண்டுநாள் மாநாடு இன்று செவ்வாய்கிழமை ஆரம்பித்து நாளை புதன்கிழமை முடிவடையவுள்ளது. வத்தளை பெகாஸஸ் ரீப் (Pநபயளரள சுநநக) ஹோட்டலில் ஆரம்பமான இம்மாநாட்டில் சிறுவர்களின் உரிமைகள் குறித்த முக்கிய தீரம்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
குளோபல் மார்ச் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்குமார் தலைமையில் இம்மாநாடு நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக வட இந்தியாவைச் சேர்ந்த குளோபல் மார்ச் நிறுவனத்தின் ஸ்தாபகரும் நோபல் பரிசு பெற்றவருமான கைலாஸ் சத்யார்த்தி கலந்து கொண்டதுடன் அவர் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
குறிப்பாக இவ்விரண்டு நாள் மாநாட்டில் சிறுவர்களின் பாதுகாப்பு, அவர்களின் உரிமை அத்தோடு எல்லையற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை என்பன ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. இவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு இறுதியாக உத்தியோகபூர்மாக கையளிக்கப்படவுள்ளது.
இம்மாநாட்டில் சிறுவர்களின் உரிமைகள் குறித்த ஆசியாவைச் சேர்ந்த எல்லையற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக நெதர்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபால் ஆகிய நாடுகள் கலந்து கொண்டன. பிரதியமைச்சர் பைசல் ஹாசிமும் இதில் கலந்து கொண்டார்.
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
No comments:
Post a Comment