ஹஜ் பெருநாளை முன்னிட்டு கல்வியமைச்சு நாட்டின் முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறையை 17ம் திகதி முதல் அங்கீகரித்துள்ளது.
20ம் திகதியே விடுமுறை ஆரம்பமாகவிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை 17ம் திகதிக்குப் பதிலாக செப்டம்பர் 1ம் திகதி பாடசாலைகளைத் திறப்பதற்கான ஆலோசனையும் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், மன்னார் கல்வி வலயத்திற்கு உட்பட்ட முஸ்லிம் பாடசாலைகளின் திபர்கள், பதில் பாடசாலை நடவடிக்கையை ஆகஸ்ட் 18ம் திகதி நாளை சனிக்கிழமை நடத்துவதற்கு மன்னார் வலய கல்வி பணிப்பாளர் திருமதி. சுகந்தி செபஸ்டியனிடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க நாளைய தினம் பதில் பாடசாலை தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மன்னார் கல்வி வலயத்தின் முஸ்லிம் பாடசாலைகள் நாளை சனிக்கிழமை இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-கரீம் எ. மிஸ்காத்
-கரீம் எ. மிஸ்காத்
No comments:
Post a Comment