வெலிகடையில் மீண்டும் முறுகல்; பெண் கைதிகள் காயம்! - sonakar.com

Post Top Ad

Monday, 20 August 2018

வெலிகடையில் மீண்டும் முறுகல்; பெண் கைதிகள் காயம்!


வெலிகடை சிறைச்சாலையில் கூரை மேல் ஏறி போராட்டம் நடாத்திய பெண் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதனை எதிர்த்து இன்று இடம்பெற்ற போராட்டம் முறுகலில் முடிவுற்றுள்ளது.


இச்சம்பவத்தில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை ஊழியர்கள் உட்பட 11 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை 50க்கு மேற்பட்டோர் வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமக்கு பிணை மறுக்கப்படுவதாகவும் வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதாகவும் தெரிவித்து பெண் கைதிகள் போராட்டத்தில் குதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment