குவைத் பிரஜைகள் இருவர் விமான நிலையத்தில் தாக்குதலுக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை சுற்றுலாத்துறையில் பல கோடி ரூபா முதலிடும் நோக்கில் தனது மனைவி - பிள்ளைகளுடன் இலங்கை வந்திருந்த சுவீடன் பிரஜையொருவரை விமானப்படை உயரதிகாரியொருவர் தாக்கி அடாவடித்தனம் புரிந்த சம்பவம் பற்றி பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
தனது மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்துக் கடுமையாகத் தாக்கியதோடு தன்னையும் தாக்கிய குறித்த நபர், தமது வாகனத்தை சேதப்படுத்தியதாகவும் ஏழு தினங்கள் தாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் 51 வயது சுவீடன் பிரஜை தெரிவித்துள்ளார்.
தமது வீட்டின் முன் ஏழு லட்ச ரூபா செலவில் கொங்கிறீட் கொண்டு பாதையை செப்பனிட்டிருந்ததாகவும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது வாகனத்தை அகற்றக் கோரியே குறித்த விமானப்படை உயரதிகாரி இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ள அவர், தமது குழந்தைகள் அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதாகவும் முறையிட்டுள்ளார்.
இலங்கைப் பெண் ஒருவரைத் திருமணம் செய்ததன் தொடர்பிலேயே இங்கு வந்து பாரிய முதலீட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதியொன்றை அமைக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment