லண்டன்: வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் பதற்றம்; ஒருவர் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 August 2018

லண்டன்: வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் பதற்றம்; ஒருவர் கைது!


பாதசாரிகள் மீது வாகனங்களால் மோதி தாக்குதல் நடாத்தப்பட்ட அனுபவங்களின் பின்னணியில் சற்று முன்னர் ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் அருகே பாதுகாப்பு தடைகளை ஊடறுத்து கார் ஒன்று பயணிக்க முனைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அதற்கு சற்று முன்பாக பாதசாரிகள் சிலர் மீதும் குறித்த வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை உயிரிழப்புகளோ பாரிய சேதங்களோ இல்லையென முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிரதேசத்தை ஆயுதம் தாங்கிய பொலிசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment