நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேயர் ரோசி சேனாநாயக்கவினால் முன் வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் 225 வீத சம்பள உயர்வுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இப்பின்னணியில் 20,000 ரூபாவிலிருந்து உறுப்பினர்களின் சம்பளம் 45,000 ரூபாவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னர் 53 உறுப்பினர்களே இருந்த கொழும்பு மாநகர சபைக்கு புதிய தேர்தல் மூலம் 119 பேர் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment