கூட்டாட்சி அரசு மக்களை நம்பவைத்து ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கின்ற பசில் ராஜபக்ச மஹிந்த ராஜபக்ச அரசு சிறிய தவறுகளே செய்ததாக தெரிவிக்கிறார்.
நிவிதிகலயில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்தே நேற்று இவ்வாறு தெரிவித்த அவர், கடந்த மூன்றரை வருடங்களில் கூட்டாட்சி செய்ததெல்லாம் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பை சீர்குலைத்தது மாத்திரம் தான் எனவும் , மஹிந்த காலத்தில் நாடு முன்னேற்றத்தை நோக்கிச் சென்றதுடன் அனைவரும் பொருளாதார ரீதியாக முன்னேறியிருந்ததாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், மஹிந்த அரசிலும் சிறு சிறு தவறுகள் நேர்ந்ததாகவும் ஆனாலும் அவை ஊதிப் பெருப்பிக்கப்பட்டதனாலேயே மக்கள் மனம் மாறியதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment