முச்சக்கர வண்டிகளைக் கட்டுப்படுத்த 'ஆணைக்குழு' - sonakar.com

Post Top Ad

Monday, 20 August 2018

முச்சக்கர வண்டிகளைக் கட்டுப்படுத்த 'ஆணைக்குழு'


இலங்கையில் முச்சக்கர வண்டி பாவனை (வாடகை உட்பட) தடுக்கப்பட முடியாது என்பதே யதார்த்தம் என தெரிவித்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர, அதனை ஒழுங்குபடுத்தும் வகையிலான ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.


அண்மையிலேயே வாடகை முச்சக்கர வண்டி சாரதியாகப் பணியாற்றுவதற்கான புதிய வயதெல்லையும் நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆணைக்குழுவுக்கான திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் அனுமதியைப் பெற்றதும் ஆணைக்குழு செயற்பட ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment