கூட்டு எதிர்க்கட்சிக்கு எதிர்க்கட்சி அங்கீகாரத்தைப் பெறும் வகையில் தமது பிரதான கட்சியிலிருந்து விலகி தனித்தியங்குவது குறித்து ஆலோசிப்பதாக சில உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களே கூட்டு எதிர்க்கட்சியில் அதிகமாக அங்கம் வகிப்பதோடு அவர்கள் சுயேட்சையாக இயங்க முடிவெடுத்தால் கட்சியின் செயலாளரால் நாடாளுமன்ற பதவியிலிருந்து அவர்களை அகற்ற முடியும் என விளக்கமளித்துள்ளார் லக்ஷ்மன் கிரியல்ல.
தமது கட்சிகளிலிருந்து விலகி சுயேட்சையாக இயங்கும் பட்சத்தில் கூட்டு எதிர்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ளலாம் எனும் கணிப்பு தொடர்பிலேயே கிரியல்ல இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment