அமெரிக்க - துருக்கி ராஜதந்திர உறவு கொதிநிலையை அடைந்துள்ள சூழ்நிலையில் 2016ம் ஆண்டிலிருந்து துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க பாதிரியார் அன்ட்ரூ பிரன்சனுக்கு பிணை வழங்க மறுத்துள்ளது உயர் நீதிமன்றம்.
2016ம் ஆண்டு தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் , சூழ்ச்சியில் பங்கெடுத்த பல ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் ஒருவரே குறித்த நபர் என்கின்ற போதிலும் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என கோரி வரும் அமெரிக்கா, துருக்கிக்கு எதிரான பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்றிலும் குறித்த நபருக்குப் பிணை மறுக்கப்பட்டுள்ளமையும் ட்ரம்ப் நிர்வாகம் எதிர் நடவடிக்கையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment