களுத்துறை கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் நேற்றைய தினம் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை தவறுதலாக இடம்பெற்ற சம்பவம் என விளக்கமளித்துள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.
விசேட அதிரடிப்படை நடவடிக்கையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாணந்துறை ஊழல் தடுப்பு பிரிவின் இரு முக்கிய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்களது கைது தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாகக் கூறி குறித்த அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment