ஞானசார தனது சுயநலத்திற்காக எதையும் செய்யவில்லையெனவும் நாட்டுக்காகவே பேசியதாகவும் இந்நிலையில் அவரைச் சிறைப்பத்த முனைவது பிக்கு சமூகத்தை அச்சுறுத்துவதாகவும் தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது கோட்டே சங்க சபா.
ஞானசாரவும் கோட்டோ சங்க சபாவில் அங்கம் வகிக்கின்ற நிலையில் ஹோமாகம நீதிமன்றுக்குள் புகுந்து ஞானசார அத்துமீறிய போதிலும் அங்கு அவர் தனக்காக எதையும் பேசவில்லையெனவும் இராணுவ உறுப்பினர்களின் நலன் மற்றும் தேசிய பாதுகாப்பு கருதியே அவ்வாறு நடந்து கொண்டதாகவும் சங்க சபா மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நலனுக்காகப் பேசும் அவசியம் ஏற்பட்ட காலத்திலெல்லாம் வரலாறு நெடுகிலும் பௌத்த பிக்குகள் அதற்காகத் துணிந்து முன் நின்று செயற்பட்டிருப்பதாகவும் சங்க சபா தெரிவித்துள்ளமையும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வை வளர்த்து வந்த ஞானசார, நீதிமன்றை அவமதித்ததன் பின்னணியில் தண்டனை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment