மேர்வின் சில்வா தனது புதல்வரை அரசியலுக்குள் அறிமுகப்படுத்த தீவிர முயற்சி செய்து தோல்வி கண்டது போலன்றி, தனது புதல்வரை நாடாளுமன்ற உறுப்பினராகும் அளவுக்கு ஆதரித்து வளர்த்தெடுத்த மஹிந்த ராஜபக்ச, கூட்டு எதிர்க்கட்சிக்குள்ளும் அவருக்கான முக்கியத்துவத்தை உருவாக்குவதற்கு திட்டமிட்டு இயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 5ம் திகதி இடம்பெறவுள்ள கொழும்பை நோக்கிய மக்கள் சக்தியெனும் பாரிய ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் பொறுப்புகளை பசில் ராஜபக்சவிடமிருந்து நாமலுக்கு பெற்றுக்கொடுத்துள்ள மஹிந்த, அது தொடர்பில் சிரேஷ்ட தலைவர்களுடன் பேசி சமாளித்து வருகிறார்.
இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகப் பிரிவும் நாமலுக்கே முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் பசில் ராஜபக்ச ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளமையும் கிராம மட்டத்திலான பிரச்சார நடவடிக்கைகளுக்கு நாமல் ராஜபக்சவே தொடர்ந்தும் தலைமை தாங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment