ஸ்ரீலங்கன் முறைகேடுகள்: விசாரணையில் புதிய தகவல்கள்! - sonakar.com

Post Top Ad

Thursday, 16 August 2018

ஸ்ரீலங்கன் முறைகேடுகள்: விசாரணையில் புதிய தகவல்கள்!


மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவரது மைத்துனரின் நிர்வாகத்தின் கீழ் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுத்து வந்திருந்தமை குறித்து ஆணைக்குழு விசாரணையில் மேலதிக தகவல்கள் வெளியாகி வருகிறது.



அரசின் முக்கியஸ்தர்களைத் திருப்திப்படுத்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அவ்வப்போது பயணிகளை அவதிக்குள்ளாக்கிய சம்பவங்களின் தொடர்ச்சியில் அப்போதைய தலைவர் நிசாந்த விக்ரமசிங்கவின் உத்தரவால் ஒரே நேரத்தில் 128 பயணிகளை அசௌகரியப்படுத்தி 170 மில்லியன் ரூபா இழப்பையும் சந்திக்க நேரிட்ட சம்பவம் பற்றி நேற்றைய விசாரணையில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் எதோச்சாதிகார நடவடிக்கையின் பின்னணியிலேயே எமிரேட்ஸ் நிறுவனத்துடன் இருந்த கூட்டுறவு முடிவுக்கு வந்ததுடன் ஸ்ரீலங்கன் விமான சேவை வீழ்ச்சிப் பாதையில் சென்றிருந்தமை நினைவூட்டததக்கது.

No comments:

Post a Comment