தலா 640,000 பெறுமதியிட்டு மேல் மாகாண சபைக்கு புதிதாக 125 நாற்காலிகளை இறக்குமதி செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஆளுனரின் தலையீட்டால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஜே.வி.பி உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி இது பற்றி தகவல் வெளியிட்டதுடன் ஆளுனரின் தலையீட்டையும் கோரியிருந்தார்.
இந்நிலையிலேயே, ஆளுனர் ஹேமகுமார நானாயக்கார குறித்த இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment