மஹிந்த ஆட்சிக்காலத்தின் போது சிரேஷ்ட அமைச்சர்களும் மஹிந்தவின் 'ஏச்சுக்கும் - பேச்சுக்கும்' ஆளாகி வெறுப்பில் இருந்ததாக தெரிவிக்கிறார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு செயலாளர் மஹிந்த அமரவீர.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மஹிந்தவின் பிரத்யேக செயலாளருமான உதிதவை அண்மையில் பொது இடத்தில் வைத்து 'மோட யகெக்' என திட்டி வெறுப்பை உருவாக்கியிருந்த மஹிந்த, பின்னர் தான் 'மகன்' போல் நினைத்து கண்டித்ததாக விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையிலேயே, மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் பல முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள் இதனால் சலிப்படைந்திருந்ததாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment