பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதம நீதியரசர், சபாநாயகர் உட்பட அரசின் முக்கிய உயர் பதவிகள் வகிக்கும் நபர்கள் முதல் வகுப்பில் விமானப் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான்.
உத்தியோகபூர்வ வேலை நேரம், மேலதிக நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பல்வேறு விடயங்களில் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை இம்ரான் கான் அரசு மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, பிரதமரின் உத்தியோகபூர்வ விமானத்தையும் உள்நாட்டு பிரயாணங்களில் மாத்திரமே பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment