ஹொரன பகுதி வீடொன்றுக்குள் புகுந்து இரு குழந்தைகளின் தாயான பெண்ணொருவர் மீது பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடாத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தலைப் பகுதியில் காயமுற்றுள்ள நிலையில் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை படகொட, தெபுவன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
காயமுற்ற பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment