சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு வாக்களித்தவாறு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் விளையாட்டுத்துறை அமைச்சில், நேற்று முன் தினம் (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது, கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். எதிர்வரும் 6 மாதங்களில் இத்தேர்தலை நடத்துவதாக, சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு மிகப் பொறுப்புடன் கூறியுள்ளோம்.
இந்தத் தேர்தலை சுயாதீனமாக நடத்துவதற்கும், அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கும் நான் தயாராகவுள்ளேன். முன்னாள் வீரர்களும் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்களும் வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளனர்.
வீரர்கள் மட்டுமே இறுதியில் எமக்கு முக்கியமானவர்கள். நிர்வாகம் என்பதும் விளையாட்டு என்பதும் வேறு வேறு. கிரிக்கெட்டை மேம்படுத்தி விளையாடுவதற்கு வீரர்களுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றார்.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment