இன்று முதல் கூட்டாட்சியின் 'விசேட நீதிமன்றம்'! - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 August 2018

இன்று முதல் கூட்டாட்சியின் 'விசேட நீதிமன்றம்'!


ரணில் - மைத்ரி கூட்டரசு கடந்த மூன்று வருடங்களாக மஹிந்த ராஜபக்ச அரசின் ஊழல்களுக்கெதிரான தக்க நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய நிலையில் இன்று முதல் 'விசேட நீதிமன்றம்' இயங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த அரசின் ஊழல், மோசடிகளை துரிதமாக விசாரிக்கவெனவே இந்நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆளுந்தரப்பு தெரிவிக்கிறது.

ஆட்சி மாற்றத்தின் பின் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், நிதி மோசடி விசாரணைப் பிரிவு, சுயாதீன ஆணைக்குழுக்கள் என பல்வேறு விடயங்களை கோலாகலமாக கூட்டாட்சி அறிவித்து வருகின்ற போதிலும் தீர்க்கமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாத நிலையில் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் படு தோல்வியை சந்திக்க நேர்ந்திருந்தமையும் எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்தில் விசேட நீதிமன்றம் அரசியலில் முக்கியத்துவத்தை பெறுகின்றமையும் குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment