பாகிஸ்தானின் பிரதமராகத் தெரிவாகியுள்ள முன்னாள் கிரிக்கட் நட்சத்திரம் இம்ரான் கானுக்கு தொலைபேசியூடாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார் சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான்.
பாகிஸ்தானுடன் சவுதி அரேபியா நீண்டகாலமாக நல்லுறவைப் பேணி வரும் அதேவேளை வளைகுடா அரபு நாடுகளுக்கிடையிலான முறுகலிலும் சவுதி கூட்டணியை பாகிஸ்தான் ஆதரித்திருந்தது.
இந்நிலையில், இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார மற்றும் அரசியல் உறவை வளர்த்துக்கொள்ள இருவரும் தமது தொலை பேசி உரையாடல் ஊடாக கலந்துரையாடியுள்ளதாக சவுதி அரச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுளளன.
No comments:
Post a Comment