ஞானசாரவின் இடது சிறுநீரகத்தில் காணப்படும் கல்லை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்படவிருந்த சத்திர சிகிச்சை உடல் நலக்குறைவு காரணமாக மேலும் 48 மணி நேரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ஞானசாரவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை தேவைப்படுவதாக வெளியாகி வரும் தகவல்களை பயங்கரவாத அமைப்பான பொது பல சேனா மறுத்துள்ளது.
ஆறு வருடங்களில் நிறைவடையும் வகையில் ஞானசாரவுக்கு 19 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிறைச்சாலை பாதுகாப்பு ஊழியர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment