நீதி மன்ற அவமதிப்பின் பின்னணியில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஞானசார தரப்பு மேன்முறையீடு செய்துள்ளது.
தற்போது ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் ஞானசாரவுக்கு ஆறு வருடங்களில் நிறைவடையக் கூடிய வகையிலான 19 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஞானசாரவுக்கு வெள்ளியன்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேன்முறையீடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாய்மூல விசாரணை இம்மாதம் 29ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment