கண்டி, திகன மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறைகளை அரங்கேற்றிய மஹசோன் பலகாய எனும் பயங்கரவாத அமைப்பின் தலைவர் இனவாதி அமித் வீரசிங்க உட்பட சகாக்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
தனக்கு ஆதரவளித்த பொலிசார் தன்னைக் கைது செய்து சிறையிலடைத்தமையானது பொலிசாரின் கொந்தராத்து செயல் என முன்னர் அமித் தெரிவித்திருந்த நிலையில் விளக்கமறியல் இம்முறையும் நீடிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் எதிர்வரும் 7ம் திகதி வரை அமித் மற்றும் சகாக்கள் எண்மர் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment