நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஆறு வருடங்களில் நிறைவடையும் வகையில் வழங்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ள ஞானசாரவுக்கு சிறைச்சாலை சீரூடை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்சமயம் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஞானசார, மேன்முறையீடு செய்துள்ள நிலையில் அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் நடவடிக்கை பின்போடப்பட்டுள்ளது.
எனினும், அவருக்கு வெள்ளை நிற சீருடை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையில் இருக்கும் ஞானசாரவுக்கு காவலாக ஆயுதம் தரித்த இரு சிறைப் பாதுகாப்பு ஊழியர்கள் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment