ஞானசாரவுக்கு இன்று இலங்கையிலேயே சத்திர சிகிச்சை! - sonakar.com

Post Top Ad

Monday, 20 August 2018

ஞானசாரவுக்கு இன்று இலங்கையிலேயே சத்திர சிகிச்சை!


உடல் நலக்குறைவு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த ஞானசாரவின் சத்திர சிகிச்சை இன்றைய தினம் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சத்திர சிகிச்சைக்காக ஞானசார வெளிநாடு கொண்டு செல்லப்படலாம் என்று முன்னர் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது உடல் நலம் தேறியுள்ளதாகவும் இன்றைய தினம் இலங்கையிலேயே சத்திர சிகிச்சை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஆறு வருடங்களில் நிறைவடையும் வகையில் 19 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்ட நிலையில் சிறைக் காவலர்களின் பாதுகாப்பில் ஞானசார வைத்தியசாலையில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment